தேவதானப்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பெரியகுளம் எம்எல்ஏ ஆய்வு

தேவதானப்பட்டி, ஆக 1: தேவதானப்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. பெரியகுளம் ஒன்றியத்தில் வாரத்தில் ஒரு நாள், நான்கு அல்லது ஐந்து ஊராட்சிகளை இணைத்து மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன்படி தேவதானப்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் நேற்று, கீழவடகரை, அழகர்நாயக்கன்பட்டி, எண்டப்புளி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான முகாம் நடைபெற்றது. முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, மின்வாரியத்துறை, உள்ளிட்ட துறைகள் சார்ந்த விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இந்த முகாமினை பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் ஆய்வு செய்தார். பெரியகுளம் யூனியன் சேர்மன் தங்கவேலு, பிடிஓ மலர்விழி, எண்டப்புளி ஊராட்சிமன்ற தலைவர் சின்னபாண்டியன், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து