தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் மோடியை போல் நான் பொய் பேச மாட்டேன்: அசாமில் ராகுல் ஆவேசப் பேச்சு

கவுகாத்தி: அசாம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மெகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று சூறாவளி பிரசாரம் செய்தார். இம்மாநில பெண்களுக்கு மாதம் ₹2,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அவர் அளித்தார். அசாம் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 27ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் ஆளும் பாஜ., காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜ வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று இந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். திப்ருகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘‘அசாம் மாநில தேயிலை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ351 நிதியுதவி வழங்கப்படும் என பாஜ. வாக்குறுதி அளித்தது.  ஆனால், அது தற்போது ரூ167 மட்டுமே வழங்கி வருகிறது. நான் நரேந்திர மோடியை போல் பொய் பேச மாட்டேன். இங்கு உங்களுக்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் 5 உத்தரவாதங்களை அளிக்கிறோம்.  இதன்படி, தேயிலை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ365 வழங்கப்படும்.குடியுரிமை திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். 5 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவோம். 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ2 ஆயிரம் உள்ளிட்டவை வழங்குவோம். மேலும், தேயிலை தொழிற்துறைக்காக தனி அமைச்சகம் உருவாக்குவோம். இதற்கான தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது,’’ என்றார்.‘அன்பால் இணைக்கிறோம்’திப்ரூகரில் உள்ள கல்லூரியில் மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாடினார். அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில், ‘‘அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தாது. மத்தியில் ஆட்சிக்கு வந்தால், இச்சட்டத்தை மொத்தமாகவே தடுத்து நிறுத்துவோம். வெறுப்புணர்வின் மூலம் மக்களை பாஜ பிரிக்கிறது. ஆனால், காங்கிரஸ் மக்களை அன்பால் இணைக்கிறது. நாக்பூரில் உள்ள ஒரு அமைப்பு (ஆர்எஸ்எஸ்) ஒட்டு மொத்த நாட்டையும் கட்டுப்படுத்த முயற்–்சிக்கிறது,’’ என்றார். …

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு