தேர்தல் பரப்புரை!: முதல்வர் பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற மக்கள்..அதிமுக-வினர் அதிர்ச்சி..!!

மதுரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் அவரது தேர்தல் பரப்புரையை கேட்க மக்கள் ஆர்வம் காட்டாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. பழனிசாமி வேனில் நின்று பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் போதே அங்கு திரண்டிருந்த மக்கள் அவரது பேச்சை கேட்க விருப்பம் இல்லாமல் திரும்பி செல்லக்கூடிய காட்சிகளும் வெளியாகியிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை முதல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து ஒட்டகடையில் பிரச்சாரம் முடித்துவிட்டு மேலூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரிய பெரிய புள்ளானை ஆதரித்து மேலூர் பேருந்து நிலையம் முன்பு பரப்புரை மேற்கொண்டார். காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்து பொதுமக்கள் அழைத்துவரப்பட்டனர். முதல்வர் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் கடும் வெயிலில் அவதிக்குள்ளாகினர். தாமதமாக வந்த முதல்வர் தனது அரசின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரிக்காமல் எதிர்க்கட்சி தலைவரை விமர்சித்து பேசிக்கொண்டிருந்ததால் கடும் வெயிலில் காத்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்து கூட்டத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றதால் அதிமுக-வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்டும் காணாமல் முதல்வர் பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். மேலும் அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் வாகனமும் முதல்வர் பிரச்சார கூட்டத்தில் சிக்கிக்கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் உதவியுடன் அம்புலன்ஸ் அப்பகுதியை கடந்து சென்றது. முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே மக்கள் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Related posts

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார்: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவிப்பு

அண்ணாமலையை கிண்டல் செய்ததால் ஆத்திரம்; செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம்: மதுரை பாஜ நிர்வாகி அறிவிப்பு

அடித்தட்டு மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுக: ராயபுரத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு