தேர்தல் செலவுக்கு தந்த பணத்தில் 27 ஏக்கர் நிலத்தில் தோட்டம், புது வீடு: எச்.ராஜா மீது நீக்கப்பட்ட பாஜ நிர்வாகிகள் குற்றச்சாட்டு

காரைக்குடி: சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பாஜ சார்பில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிட்டு தோல்வியடைந்தார். தோல்விக்கு கட்சி நிர்வாகிகள்தான் காரணம் என கூறி எச்.ராஜா குற்றம்சாட்டினார். இதனை கண்டித்து காரைக்குடி நகர தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டல தலைவர் பிரபு ஆகியோர் ராஜினாமா செய்தனர். இதனிடையே, எச்.ராஜா மீது புகார் தெரிவித்த 3 பேரையும், கட்சியை விட்டு நீக்குவதாக நேற்று முன்தினம் மாநில பாஜ தலைமை அறிவித்தது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 3 பேரும் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது  சந்திரன் கூறுகையில், ‘‘விசாரணை செய்ய வந்த மாநில நிர்வாகிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டனர். புகார் தெரிவித்த எங்களிடம் விசாரிக்கவில்லை. எச்.ராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் மட்டும் விசாரித்தனர். எச்.ராஜாவின் நிர்பந்தம் காரணமாகவே எங்களை நீக்கி உள்ளனர். பாஜவினருக்கு தேர்தல் செலவுக்கு ரூ.13 கோடி தரப்பட்டதாக எஸ்.வி.சேகரின் ஆடியோவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தலுக்கு வந்த பணத்தை எச்.ராஜா முறையாக செலவு செய்யவில்லை. ரூ.4 கோடி முறைகேடு செய்துள்ளார். அதில், தனது பூர்வீக வீட்டை இடித்து புதுவீடு கட்ட உள்ளார். கல்லல் அருகே எழுமபட்டியில் 27 ஏக்கர் நிலத்தை வாங்கி தோட்டம், புது வீடு கட்டுகிறார். இந்த பணம் எங்கிருந்து வந்தது? தேர்தலின்போது பணத்தை செலவு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டியில் அவரது மருமகன், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சூரியநாராயணன் மற்றும் அவரது உறவினர்கள்தான் இருந்தனர். தோல்விக்கு முழு காரணம்  எச்.ராஜா மற்றும் அவரது மருமகன்தான்’’ என்று தெரிவித்தார்.* தாமரை மலரவே மலராதுபேட்டியின்போது சந்திரன் மேலும் தெரிவிக்கையில், ‘‘அடிமட்ட தொண்டர்களை எச்.ராஜா கெடுக்க  நினைக்கும் வரை இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல.  தமிழகத்திலும் பாஜ வளராது. தாமரை மலரவே மலராது. ஒட்டுமொத்த நிர்வாகமும் அப்படித்தான் உள்ளது. வர உள்ள நகராட்சி தேர்தலில் நான் நிறுத்தும் வார்டு தலைவரை கூட அவர் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியாது’’  என்று கூறினார்….

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்