தேர்தல் அலுவலர்களாக ஊரக பகுதி அதிகாரிகளை நியமிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு 80 ஆயிரம் காவல்துறையினர், 1 லட்சத்து 30 ஆயிரம் அரசுப் பணியாளர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிப்பதாகவும்  தெரிவித்திருந்தது. இந்நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதிலாக, ஊரக பகுதிகளை சேர்ந்த  அதிகாரிகளை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர், தனது மனுவில், தேர்தலில் பெரும்பாலும் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடுகளை தவிர்க்கவும், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த ஊரக பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது