தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரியும் காட்டு மாடுகள்-தொழிலாளர்கள் அச்சம்

ஊட்டி :மைனலைமட்டம், மெரிலேண்ட் பகுதியில் தேயிலை தோட்டங்களில் காட்டு மாடுகள் முகாமிடுவதால் விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் காட்டு மாடு, சிறுத்தை, கரடி, காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு  நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவை உணவிற்காக மக்கள் வசிக்கும் பகுதிகள், தேயிலை தோட்டம் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வருகின்றன. குறிப்பாக, காட்டு மாடுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் இவை பெரும்பாலும் தேயிலை தோட்டங்களிலேயே வலம் வருகின்றன. கூட்டம் கூட்டமாக வரும் இந்த காட்டு மாடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை தோட்டங்களில் எந்நேரமும் இந்த காட்டு மாடுகள் வலம் வருவதால், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தேயிலை தோட்டங்களுக்கு சென்று தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் தற்போது காட்டு மாடுகள் தேயிலை தோட்டங்களில் வலம் வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மஞ்சூர் அருகே உள்ள மெரிலேண்ட், மைனலை மட்டம் மற்றும் பெங்கால்மட்டம் போன்ற பகுதிகளில் இந்த காட்டு மாடுகள் தேயிலை தோட்டங்களுக்குள் உலா வருவதால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்….

Related posts

பெருங்களத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!!

சென்னை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!!

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.882 ஆக உயர்வு