தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் நின்று மக்களை அச்சுறுத்திய ஒற்றை யானை: வனத்துறையினர் விரட்டியடித்தனர்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் நின்று, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை, அருகில் உள்ள நொகனூர், மரகட்டா, அந்தேவனப்பள்ளி, தாவரகரை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று, வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வெளியே வந்த ஒற்றை யானை, மரகட்டா-நொகனூர் காட்டு பகுதியின் இடையே, சாலையில் நின்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதனை டூவீலர்கள், பஸ்களில் செல்வோர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன், வனத்துறையினர் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் அங்கு சென்று, சாலையில் நின்று கொண்டிருந்த ஒற்றை யானையை, பட்டாசு வெடித்து நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது….

Related posts

அரசு ஒதுக்கும் இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார்: அரசு!