தேனி புதிய பஸ்நிலையம் எதிரே திட்டசாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட டூவீலர்களுக்கு போலீசார் அபராதம்

தேனி, ஜூலை 4: தேனி புதிய பஸ்நிலையத்திற்கு எதிரே உள்ள திட்டச்சாலையில் கடைகளின் முன்பாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். தேனி புதிய பஸ்நிலையம் தேனி நகர் மதுரை சாலையில் இருந்து பெரியகுளம் செல்லும் பை பாஸ் சாலையில் உள்ளது. இப்புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களுக்கும்பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இப்பஸ்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் மிகுந்தே காணப்படுகிறது.

இப்புதிய பஸ்நிலையத்தின் வடக்கு வாசல் பகுதியில் கலெக்டர் அலுவலகம் செல்லக்கூடிய திட்டச்சாலை உள்ளது. இச்சாலையின் மறுபுறம் ஓட்டல்கள், பழக்கடைகள், மருந்துக்கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளன. இந்நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்த நகராட்சி சார்பிலோ அல்லது போக்குவரத்து போலீஸ் சார்பிலோ இப்பகுதியில் இடம் ஒதுக்கவில்லை.

இதனால் இக்கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை கடைகளுக்கு முன்பாக நிறுத்திச் செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர். கடைகளுக்கு முன்பாக நிறுத்தப்படும் வாகனங்களால் திட்டச்சாலயில் போக்குவரத்து இடையூறு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, நேற்று தேனி போக்குவரத்து போலீசார் இக்கடைகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு நோ பார்க்கிங் ஏரியாவில் விதி மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக அபராதம் விதித்தனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி