தேனி கல்லூரியில் தேசிய மதிப்பீட்டு தரச்சான்று குழு ஆய்வு

தேனி, ஜூன் 10: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழு ஆய்வு நடத்தியது. இக்கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதி, கல்வித்தரம், அனைத்துத் துறைகளின் செயல்பாடு மற்றும் கல்லூரியின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், எம்என்சி கம்பெனியின் முதன்மை நிர்வாக அலுவலர் மற்றும் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி கல்லூரி குறித்த கருத்துக்களை கேட்டறிந்தனர். இரண்டாம் நாள் ஆய்வின்போது, இக்குழுவினர் கல்லூரியின் செயல்பாட்டை பாராட்டி என்ஏஏசி குழுவிற்கு பரிந்துரைத்தனர்.

ஆய்வின்போது தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் இருந்தனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்