தேனி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்!: தற்காலிக தடுப்புகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்..!!

தேனி: தேனி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளை தடுக்க சாலை குறியீட்டு பலகைகள், விழிப்புணர்வு பதாதைகளை வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை மற்றும் குமிலி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆகிய இரு சாலைகளும் தேனி கோடாங்கிபட்டி அருகே சந்தித்து கொள்கின்றன. 
4 முனை சந்திக்கும் இந்த சாலையில் தினமும் விபத்துகள் நடக்கின்றன. பணிகள் முடிந்த சாலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விபத்துகளை தடுக்க உரிய வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமிலி – திண்டுக்கல் சாலை பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. 
இருப்பினும் பணிகள் நிறைவடையவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை திறக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். விபத்துகள் தொடர்கதையாகி இருப்பதால் இந்த சாலையை பயன்படுத்தவே பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Related posts

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்