தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.: டெல்லி நீதிமன்றம்

டெல்லி: தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா அவர் பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ளார். முதலாவதாக, பங்குச் சந்தை பற்றிய ரகசியத் தகவல்கள் இமயமலைச் சாமியார் ஒருவருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது என்று செபி உத்தரவில் கூறியுள்ளது.மேலும், தேசிய பங்குச் சந்தை குழும அதிகாரியாக ஆனந்த் சுப்ரமணியனை நியமித்ததிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக செபி தெரிவித்தது. இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணா விசாரணை வளையத்தில் சிக்கினார். அவரிடம் சிபிஐ தனது விசாரணையை நடத்திவருகிறது. இந்தநிலையில் தேசிய பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக பதிவான வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. …

Related posts

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: மோடி இன்று ஆலோசனை

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்