தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்த அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

வலங்கைமான் : மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்த வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிமாணவிகள் மற்றும் அவர்களுக்குத் துணை நின்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.திருவாரூரில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரு குழுவினர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் பற்றியும் , கொரோனா நாட்களில் குழந்தை தொழிலாளர் பற்றியும் ஆய்வு செய்து கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.தேவதர்ஷினி குழுவினரின் டெங்கு காய்ச்சல் பற்றிய ஆய்வுக்கட்டுரை மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாநில அளவிலான போட்டிக்கு செல்கிறது. குழந்தை தொழிலாளர்கள் குறித்து ஆய்வுக்கட்டுரை வழங்கிய பிரியதர்ஷினி குழுவினர் இதுவரை 17 குழந்தை தொழிலாளர்களின் பெற்றோரிடம் பேசி அவர்களை மீட்டு பள்ளிக்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆய்வுக்கு தலைமை ஆசிரியர் பரிமளா,வழிகாட்டி ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் துணைநின்றனர்.ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த மாணவிகளை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாணிக்கவாசகம் பாராட்டினர்….

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்