தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கும் கடிதத்தை தமிழக அரசு ஒன்றிய அரசிடம் கொடுத்துள்ளது: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. இது தொடர்பான எழுத்துப்பூர்வமான  கடிதத்தை ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நுண்ணுயிரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை வெள்ளி விழா விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்வில் அண்ணாநகர் எம்எல்ஏ மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பொன்முடி: தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பது தொடர்பான எழுத்துப்பூர்வமான கடிதத்தை மத்திய கல்வி அமைச்சரிடம் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது. ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் என்பதால், சுபாஸ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும் விரைவில் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்படும் என்றும்  முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கும். இவ்வாறு தெரிவித்தார்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு