தேசிய கடற்கரை டெக்பால் போட்டி தமிழக அணி சாம்பியன்

சென்னை: மாமல்லபுரத்தில் நடந்த தேசிய அளவிலான கடற்கரை டெக்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு டெக்பால் சங்கம் சார்பில், இந்திய டெக்பால் பெடரேஷன் ஆதரவுடன் தேசிய அளவிலான முதலாவது டெக்பால் சாம்பியன்ஷிப் போட்டி, மாமல்லபுரம் சுற்றுலாக் கழக விடுதி வளாக மைதானத்தில் நடந்தது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட 18 மாநிலங்களில் இருந்து 170 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 4 நாட்கள் நடந்த இந்த தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியின் முடிவில், தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. 2ம் இடத்தை மஹாராஷ்டிரா அணியும், 3ம் இடத்தை குஜராத் அணியும் வென்றன. இந்த போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக அணி, அடுத்த ஆண்டு சீனாவில் நடக்கும் உலக அளவிலான கடற்கரை டெக்பால் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை