தென்பெண்ணை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

 

போச்சம்பள்ளி, செப்.10: போச்சம்பள்ளி, ராயக்கோட்டையில் சதுர்த்தியன்று வைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தென்பெண்ணை ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழ்நாடு முதுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் சிலைகள் வைத்து, பக்தர்கள் வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் 1 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். அவல், கொழுக்கட்டை, பழ வகைகள், சுண்டல் படைத்தும், எருக்கம் பூ மாலை அணிவித்தும் வழிபட்டனர்.

தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை, நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் லாரி, டெம்போ, கார், டிராக்டர் மூலம் ஊர்வலமாக எடுத்து சென்று, போச்சம்பள்ளி அருகே, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் கரைத்தனர். இதனையொட்டி, இன்ஸ்பெக்டர்கள் நாகலட்சுமி, சிவா ஆகியோர் தலைமையில், உளவுத்துறை ஏட்டு ஆனந்தராஜ், சேகர், விஜயன் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் தென்பெண்ணை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ராயக்கோட்டை: ராயக்கோட்டை அருகே உள்ள பழையூரில், நேற்று விநாயகர் சிலைகளை லாரிகளில் ஊர்வலமாக எடுத்து சென்று தென்பெண்ணை ஆற்றில் கரைத்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்