தென்னிந்திய அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான கபடி போட்டி

பெரியகுளம்,அக். 14: பெரியகுளம் பகுதியில் உள்ள ரோசி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் தென்னிந்திய அளவில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையே 3 நாட்கள் நடைபெறும் கபடி போட்டிகள் துவங்கியுள்ளது. போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து வேலூர் வேலம்மாள் பள்ளி, கன்னியாகுமரி சென்ட் ஜான்ஸ் பள்ளி, நல்லாம்பாளையம் அமிர்தா வித்தியாலயா பள்ளி, பாண்டிச்சேரி வேலம்மாள் உட்பட 300 அணிகள் பங்கேற்றுள்ளது.

இந்த போட்டியில் 200 மாணவர் அணியும், 100 மாணவிகள் அணியும் விளையாடி வருகின்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் குபேந்திரன் தலைமை வைத்து துவக்கி வைத்தார் டாக்டர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஆருதரத்தினம் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் பள்ளி பள்ளி சேர்மன் ஓ.ராஜா, சசிகலாவதி ராஜா, இயக்குனர் முத்துகுகன், பள்ளி தாளாளர் ஐஸ்வர்யா முத்துகுகன், அப்சர்வர் ஜவகர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை