தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம்

 

கோவை, அக்.25: கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று அவர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் தொழிற்சங்க தலைவர்கள் தமிழ்நாடு செல்வம், சந்தானகுமார் உள்பட பலர் முன்னிலையில் நேற்று காலையில் கோவை வ.உ.சி. மைதானத்தில் உள்ள வ.உ.சி. சிலை முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள் அங்கு அமர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தொழிற்சங்க தலைவர்கள் கூறியதாவது: கலெக்டர் அறிவித்த தினக்கூலி ரூ.721-ஐ கூட எங்களுக்கு வழங்கவில்லை. எனவே இதை வலியுறுத்தி நாளை (இன்று) கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்.

ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கோவை மாநகர பகுதியில் பல இடங்களில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி