தூத்தூர் புனித யூதா கல்லூரியில் கருப்பு ஆடை அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்

நித்திரவிளை, ஆக. 9: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை உடனே வழங்க வேண்டும், யுஜிசி நெறிமுறைகளின் படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எம். பில், பி எச்.டி பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் மற்றும் முட்டா சார்பில் கருப்பு ஆடை அணிந்து வகுப்புக்கு சென்று வருகின்றனர். இதில் புனித யூதா கல்லூரியில் மூட்டா ஆசிரியர்கள் நேற்று முன்தினம் கருப்பு ஆடை அணிந்து வந்து வகுப்பிற்கு சென்றனர். நேற்றும் கருப்பு ஆடை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி