தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி, ஜூன் 19: தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பொதுப்பணித்துறை (நீர்வளம்) அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை வகித்தார். இதில் வெள்ள நேரத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது தொடர்பாகவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்