துணை மேயர் கேஆர் ராஜூ தலைமையில் நெல்லை மாநகராட்சி சுகாதார குழு ஆலோசனை கூட்டம்

நெல்லை, ஜூன் 23: நெல்லை மாநகராட்சி சுகாதார நிலைக்குழு ஆலோசனை கூட்டம் துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமையில் நடந்தது. சுகாதார நிலைக்குழு தலைவர் ரம்ஜான் அலி, மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோர் பங்கேற்று பேசினர். நிலைக்குழு உறுப்பினர்கள் சுப்புலெட்சுமி, சேக்மன்சூர், மாரியப்பன், பாலம்மாள், ஷபி அமீர்பாத்து, சீதா பாலன், அஜய், அம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுகாதார அலுவலர்கள் சாகுல்ஹமீது, இளங்கோ, முருகேசன், அரசகுமார், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், பாலு, அந்தோணி, சங்கரலிங்கம், நடராஜன், சங்கர நாராயணன், முருகன், பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக தேவையான உபகரணங்கள் இருப்பு வைக்கவும், அதுகுறித்து செயல்திட்டம் உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதில் அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை நடக்கவுள்ளதால், அதற்கு முன்னேற்பாடாக தூய்மை பணிகளை வார்டுகள் தோறும் மேற்கொள்வது குறித்தும், ஹஜ் திருநாளை முன்னிட்டு சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேரோட்டம் வரும் 2ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ரதவீதிகளிலும், டவுன் சுற்றுபகுதிகளிலும் தூய்மை பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், மருத்துவ வசதி செய்து கொடுக்கவும், தேவையான இடங்களில் குடிநீர் வசதி, நடமாடும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கவும் தக்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்