துணி வியாபாரியிடம் ₹17.25 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, செப்.3: பர்கூர்-ஜெகதேவி சாலையில் உள்ள துரைஸ் நகரை சேர்ந்தவர் தியாகு(35), துணி வியாபாரி. இவரது செல்போனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் குறைந்தளவில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் நம்பருக்கு தியாகு தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு ₹17.25 லட்சத்தை அனுப்பி வைத்தார். ஆனால் அவர்கள் கூறியபடி எந்த லாபமும் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்