தீயணைப்பு துறையினர் ஒத்திகை

 

ஊட்டி, செப்.28: தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோம்பர் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளையும் உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு துறை நீலகிரி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, குன்னூர் நிலைய அலுவலர் குமார் ஆகியோர் தலைமையில் குன்னூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பருவமழையின் போது பாதிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது என்பது குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் மேலும் அனைத்து உபகரண பொருட்கள் மற்றும் விஷவாயு கசிவு ஏற்பட்டால் பாதுகாப்பு உடைகள் அணிந்து உள்ளே சென்று மீட்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மேலும், மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டது.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்