தீப்பெட்டி தொழிலுக்கு வரி சலுகை வேண்டும்: சசிகலா கோரிக்கை

சென்னை: தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தீப்பெட்டி தொழிலுக்கு வரி சலுகை அளிக்க வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, வி.கே.சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கை: தூக்குக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. நான்கு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில் உள்ளனர். குறிப்பாக பெண் தொழிலாளர்களே 90 சதவிகித அளவில் ஈடுபடுகின்றனர். கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தீப்பெட்டிக்கு மூலப்பொருட்களுக்கு 12 சதவீதமும், தீப்பெட்டிக்கு 18 சதவிகிதமும் ஜி.எஸ்.டி வரி விதிப்பதால் தீப்பெட்டி உற்பத்தி விலை அதிகமாகி மிகவும் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியும் மூன்று முதல் நான்கு மடங்கிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்கால் தீப்பெட்டி உற்பத்திக்கான அடக்க விலை உயர்ந்துவிட்டதால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் அழிந்துவிடாமல் தடுக்கவும், இதில் ஈடுபட்டுவரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், தீப்பெட்டி தொழிலுக்கு வரி சலுகைகள் அளித்து ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

ரேஷனில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் அனைவருக்கும் விநியோகம்: எடப்பாடிக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ம் தேதி திருவள்ளூரில் தொடங்கி வைக்கிறார்: பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

காலை உணவு திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டங்களை பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மாபெரும் வெற்றிகண்டுள்ளது: தமிழ்நாடு அரசு பெருமிதம்