தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் அதிக புகை, ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்

 

அரியலூர், நவ.10: அதிக புகை, அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என்று தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது. அரியலூர் அருகேயுள்ள சிறுவளூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் மாசற்ற தீபாவளி விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி இதில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; தீபாவளி மகிழ்ச்சியான பண்டிகை.

அதே நேரத்தில் இந்த மகிழ்ச்சி அடுத்த தலைமுறைக்கும் நிலைக்க வேண்டும் என்றால் இந்த பூமியை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும். எனவே சுற்றுச் சூழலை மாசுபடுத்தாமல் அதிக புகை, அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான சத்தம் ,புகை ,மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளையும் பாதிக்கும். அதிக மன உளைச்சலையும் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பேரணி கிராமத்தின் அனைத்து தெரு வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியின் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும் என்று முழக்கமிட்டனர். முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பேரணியில் சுப்பராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந்தில் குமரன், செவ்வேள், தங்கபாண்டி இளநிலை உதவியாளர் மணிகண்டன் ,பயிற்சி ஆசிரியர்கள் கண்ணகி, சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை