தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர், ஜூலை 25: காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தொடரும் தீண்டாமை வன்கொடுமைகளை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தில் பட்டியலின மக்களை பாதுகாக்க வேண்டும், தீண்டாமை கொடுமையில் ஈடுபடுவோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆவியூரில் நடைபெறும் தீண்டாமைகள் குறித்து ஐகோர்ட் மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் லட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் துவக்கவுரையாற்றினார். தமிழ்புலிகள் கட்சியின் விடியல்வீரப்பெருமாள், ஆதித் தமிழர் கட்சியின் விஸ்வைகுமார், ஆதித்தமிழர் பேரவையின் கவுதமன், பூவை ஈஸ்வரன், திராவிடர் தமிழர் கட்சியின் ஆதிவீரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு கண்டன உரையாற்றினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஊர்காவலன், மாவட்ட பொருளாளர் சுப்புராம், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜூனன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை