திரையரங்கம் புதுப்பிக்கும் பணியின்போது 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி: கீழ்ப்பாக்கத்தில் பரிதாபம்

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் புதுப்பிக்கும் பணியின் போது, இரும்பு சாரம் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர், 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கீழ்ப்பாக்கம் ஈவெரா நெடுஞ்சாலையில் பிரபல திரையரங்கம் ஒன்று உள்ளது. இந்த திரையரங்க முகப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு திரையரங்க சுவர் அருகே இரும்பு சாரம் கட்டும் பணி நடந்தது. இதில் அரக்கோணத்தை சேர்ந்த ராஜேஷ் (26) என்பவர் ஈடுபட்டிருந்தார்.சாரம் கட்டும் பணியில் ஈடுபட்ட ராஜேஷ், திடீரென எதிர்பாராதவிதமாக 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து, சுயநினைவின்றி உயிருக்கு போராடினார். உடனே அருகில் இருந்தவர்கள் ராஜேஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, திரையரங்கில் கட்டுமான பணி ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு