திருவேட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பு சொத்து சுவாதீனம்

சென்னை: திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.20  கோடி மதிப்பிலான சொத்து கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அதன்படி, சென்னை, திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரர்  கோயிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான சொத்து கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. போரூர், கெருகம்பாக்கம் கிராமத்தில் சர்வே எண்-278/1 , 278/2-ல் மொத்தம்  15 கிரவுண்ட் மனை உள்ளது. இதனை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இருந்ததால், சென்னை மண்டலம் -2 இணை ஆணையரின் உத்தரவுப்படி, நேற்று வருவாய் மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.20 கோடி. இந்த சொத்து குத்தகைக்கு வழங்கிடும் வகையில் பொது ஏலம் விடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் கோயிலின் மேம்பாட்டிற்காக செலவிடப்படும்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்