திருவெற்றியூரில் 7 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த 600 ஆண்டு பழமையான கோயில் கட்டப்படுமா?-பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருவாடானை : திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் 600 ஆண்டு பழமையான ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில் மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு முன்பே திருவெற்றியூர் புதுப்பையூர் கிராமத்தில் மிகவும் பழமையான மாதவப் பெருமாள் கோயில் தான் இப்பகுதியில் சிறப்பு பெற்று விளங்கியுள்ளது.இந்த கோயிலுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை திருவிழாவும் நடைபெற்று வந்துள்ளது. பழமையான இக்கோயில் கால போக்கில் இடிந்து பழுது அடைந்துவிட்டது. இதனால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு புது கோயில் கட்டவேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அதற்காக இக்கோயிலின் உள்ளே இருந்த மாதவப்பெருமாள் சீதேவி மற்றும் பூதேவி சிலைகளை பாதுகாக்கும் வகையில் பாலாலயம் செய்து சிலையை கோயிலின் உள்பகுதியில் உள்ளே வைத்து சிறிய கொட்டகை அமைத்து வைத்துள்ளனர். மேலும் கோயிலை கட்டும் பணிகளும் தொடங்கியது. அப்போது கட்டுவதற்காக வானம் தோண்டும் போது இரண்டடி உயரம் கொண்ட மூன்று ஐம்பொன் சிலைகள் கிடைத்தது.தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அந்த சிலைகளை மீட்டுபாதுகாப்பாக தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு எந்த பணியும் நடக்கவில்லை. பாலாலயம் மட்டும் நடைபெற்று இங்குள்ள சிலைகள் வெயிலிலும் மழையிலும் இருந்து வருகிறது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உடனடியாக இந்த கோயிலை கட்ட தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து திருவெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவரும் கோயிலின் ட்ரஸ்டியுமானவ ஏபிபிபெருமாள் கூறுகையில், ‘‘மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. காலப்போக்கில் கட்டிடம் இடிந்து முழுவதுமாக அகற்றப்பட்டு சிலைகளை பாலாலயம் செய்து கோயில் இருந்த இடத்துக்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. திருப்பணிக்காக வானம் தோன்றும் போது மூன்று 3 சிலைகள் கிடைத்தன. அவற்றை அரசு மீட்டு எடுத்துச் சென்று விட்டனர். கோயில் திருப்பணிக்காக கடந்த ஆட்சியில் அறநிலைய ஆட்சித்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த கட்டுமான பணியும் நடைபெறவில்லை’’ என்றார்.இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த பிரகலாதன் கூறுகையில், ‘‘ஒரு காலத்தில் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்று திருவிழாக்கள் நடைபெற்று வந்துள்ளது. உற்சவ சாமிகள் ஐம்பொன்னால் ஆன சிலைகள் இருந்துள்ளது. இக்கோயிலுக்கு முன்பாக உள்ள காலி இடத்தை திருவிழா நடத்தி வந்துள்ளனர். அந்த இடத்திற்கு பெயர் கூத்தாடி பொட்டல் என இன்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு பிரபலமாக இருந்த இந்த கோயில் முற்றிலும் தரைமட்டமாக இடிந்து போய் கிடப்பது.பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை இந்த கோயிலை வந்து ஆய்வு செய்து சென்றனர். கோயில் இருந்த இடம் தரை மட்டமாக புல் மண்டி கிடக்கிறது சாமி சிலைகளும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இந்த ஊரில் உள்ள பாகம்பிரியால் அம்மன் சித்திரை திருவிழாவில் திருவெற்றியூரில் இருந்து இந்தக் கோயில் அமைந்துள்ள மற்றொரு குடியிருப்பு பகுதியான புதுப்பையூரில் சுவாமி புறப்பாடு நடந்து. இங்கிருந்து கரகம் எடுத்து பெண்கள் ஆடி சாமியை அழைத்துச் செல்வது இன்றளவும் பல ஆண்டுகளாக வாடிக்கையாக நடந்து வருகிறது. அப்படி புகழ்வாய்ந்த இந்த கோயிலில் அதே இடத்தில் மீண்டும் கோயிலில் கட்டி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்….

Related posts

மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலைக்காக மண் அகழ்வு நடத்த மீனவர்கள் எதிர்ப்பு

நாகை பைபாஸ் சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழப்பு

இலங்கை அரசை கண்டித்து நாகையில் அக்.1-ல் தி.க. ஆர்ப்பாட்டம்!!