திருவிழாவில் தேர் தூக்குவதில் தகராறு இளைஞரை அரிவாளால் வெட்டியவர் கைது

கிருஷ்ணராயபுரம், மே 4: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் கோயில் திருவிழாவில் தேர் தூக்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த ஏப்ரல் 30ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை நடைபெற்றது.கோயில் தேரில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் நேற்று முன்தினம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சூழ தோளில் தூக்கிக்கொண்டு வீதி சுற்றி வந்தது. அப்போது பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் தெற்கு குடித் தெருவை சேர்ந்தவர் மணி மகன் வசந்த் (29). இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். மேலும் அதை ஊரை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் கோகுல் (எ)கோகுலகிருஷ்ணன் மற்றும் சேகர் என்பவரின் மகன் பூபதி ஆகிய இருவரும் கோயில் தேர் தூக்கி செல்லும்போது வசந்த் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

பிறகு மாரியம்மன் கோயிலை சென்று அடைந்ததும் கோகுல கிருஷ்ணன் மற்றும் பூபதி ஆகிய இருவரும் மீண்டும் தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தகராறு செய்துள்ளனர். அப்போது வசந்தை,கோகுலகிருஷ்ணன் என்பவர் அறிவாளால் தோள்பட்டையில் வெட்டியுள்ளார், பூபதி வசந்தை கீழே தள்ளி மிதித்து தாக்கியுள்ளார். அரிவாள் வெட்டுப்பட்ட வசந்த் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் குறித்து வசந்த் கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோகுலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி