திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்: ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருவில்லிபுத்தூர், ஏப்.6: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று காலை செப்பு தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று காலை திருவில்லிபுத்தூரில் செப்பு தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக, ஆண்டாள், ரங்கமன்னர் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க கோயில் அருகே உள்ள செப்பு தேர் நிலையத்திற்கு வந்தனர். இருவருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இருவரும் செப்பு தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து ரத வீதிகளில் செப்பு தேரோட்டம் நடந்தது.

ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் அதிகாலையில் திரண்டு வந்து செப்புத் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிந்தா கோபாலா என கோஷமிட்டு, தேரை இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு, நகரில் போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்திருந்தனர். நகர் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை