திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 35 மனுக்கள் வரப்பெற்றன

திருவாரூர்: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு உரிய தீர்வு காண வேண்டுமென அரசு சார்பில் மாவட்ட எஸ்பிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் மனுதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு, திருவாரூர் எஸ்.பி அலுவலகத்திலும் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றும் எஸ்பி அலுவலகத்தில் இந்த சிறப்பு குறைதீர் கூட்டமானது எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்களிடமிருந்து 35 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு போலீசாருக்கு எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை