திருவாடானை அருகே மழையால் சாய்ந்த மின் கம்பம்

திருவாடானை, மே 8: திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கோவணி பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் இந்த பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் உள்ள மின்கம்பம் திடீரென வயல் பகுதியில் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அதில் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மக்களும், அவ்வழியாக வயல்வெளிகளில் செல்லும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஒரு வித அச்சத்துடன் அந்த இடத்தை கடந்து செல்கின்றனர்.

மேலும் சாலையோரம் வயல்பகுதியில் சாய்ந்து கிடக்கும் அந்த மின் கம்பத்தில் செல்லும் மின் கம்பிகள் திடீரென அறுந்து விழுந்தால் மின்சாரம் பாய்ந்து ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் ஆபத்தான நிலையில் சாலையோரம் சாய்ந்துள்ள இந்த மின் கம்பத்தை சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி