திருவள்ளூரில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு

 

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலைப் பள்ளி மாணவர்களின் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற கலை நிகழ்ச்சியும், மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் உமாசங்கர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் மேரி, குமரீஸ்வரி, பொறுப்பாசிரியர்கள் ஆர்த்தி, தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, பிளாஸ்டிக் பயன்பாட்டால் நிகழும் தீமைகள் குறித்தும், மஞ்சப்பை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழலை பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் அனைத்து பெற்றோர்களுக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மழலைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை