திருமானூர் அருகில் ஏரி நீரில் மிதந்து யோகாசனம் விழிப்புணர்வு தந்த மாணவர்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் அருகில் பாளையபாடி கிராமத்தில் 6ம் வகுப்பு பள்ளி மாணவன் ஏரி நீரில் மிதந்து யோகாசன விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாளைப்பாடி கிராமத்தை சேர்ந்த முனீஸ்வரன் மகன் வீரமாமுனீஷ்வரன்(16), ஆறாம் வகுப்பு இலந்தைகூடம் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இவர் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது ஊரில் உள்ள ஏரியில் யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஏரி குளம் ஆறுகள் போன்றவற்றில் நீச்சல் தெரியாமல் சிறுவர்கள் நீர் மூழ்கி இறந்து விடுகின்றனர். அவ்வாறு விபத்து ஏற்படாமல் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று யோகா தினத்தன்று மாணவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மாரியப்பன், பள்ளி ஓவிய ஆசிரியர், யோகா ஆசியர் செந்தில்வேலன் ஆகியோர் உள்ளனர்….

Related posts

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு

சென்னை எண்ணூரில் சாலைவிபத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு