திருமண தகவல் மையம் மூலம் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்த இன்ஜினியர் கைது: செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பல லட்சம் நகை, பணம் பறித்தது அம்பலம்

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் பகுதியை சேர்ந்த வைதேகி (22, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக திருமண தகவல் மைய வெப்சைட் ஒன்றில், வைதேகி தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். இதை பார்த்து பெங்களூருவை சேர்ந்த இன்ஜினியர் சூர்யா (25), வைதேகியை செல்போனில் தொடர்புகொண்டு திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். பின்னர், வைதேகியை நேரில் சந்தித்து பேசி பழகியுள்ளார். சில நாட்களில் வைதேகியை விடுதிக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனிடையே, வைதேகியின் பெற்றோரை சந்தித்து, அவர்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி, ரூ.7 லட்சத்தை பெற்ற சூர்யா, அதன்பின்னர் தலைமறைவானார். இதுபற்றி வைதேகி கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, கோவையில் உள்ள விடுதியில் சூர்யா தங்கியிருப்பது தெரிந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் தனிப்படை போலீசார் அங்கு சென்றபோது, ஒரு இளம்பெண்ணுடன் சூர்யா தங்கியிருப்பது தெரிந்தது.  அவரை பிடித்து விசாரித்தனர். அதில், திருமண தகவல் மைய வெப்சைட் மூலம் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததும்,  அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து, பல லட்சம் ரூபாய் மற்றும் 100 சவரனுக்கு மேல் அபேஸ்  செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து சொகுசு கார் மற்றும் ₹3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.* புகார் தர பலர் தயக்கம்பாதிக்கப்பட்ட இளம்பெண்களில் பலர்  போலீசுக்கு சென்றால் அவமானம், எதிர்காலம் பாதிக்கப்படும் என கருதி அவர் மீது புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். மேலும், என்மீது புகார் அளித்தால், நாம் ஒன்றாக எடுத்துக்கொண்ட ஆபாச படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன், என சூர்யா மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து பலர்  போலீசிடம் செல்லாமல் இருந்துள்ளனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சூர்யா, தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்….

Related posts

திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏட்டுவை வெட்டி தப்ப முயன்றபோது அதிரடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது