திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள்

 

திருப்போரூர், மார்ச் 23: திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலை நகர் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள், சட்டமன்ற தொகுதி வாரியாக அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கான 318 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 383 மின்னணு வாக்கு இயந்திரங்கள், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த இயந்திரங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு, திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி முன்னிலையில் அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Related posts

கூடலூரில் மனைவி நல வேட்பு நாள் விழா

குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மேல் சாந்தியாக ஜித் நம்பூதிரி தேர்வு

திருச்சூர் அருகே கயிறு இழுக்கும் போட்டியில் மோதல்; வாலிபருக்கு கத்திக்குத்து