திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார் முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ்

 

சென்னை, மே 28: திருப்போரூர் நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜராகி ஜாமீன் பெற்றார். சென்னை அருகே கேளம்பாக்கம் அடுத்த தையூரில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசனுக்கு, சொந்தமான வீட்டில் அத்துமீறி நுழைந்து காவலாளியை அடித்து விரட்டி விட்டதாக அவரது முன்னாள் கணவரும், தமிழ்நாடு முன்னாள் சிறப்பு டிஜிபியுமான ராஜேஷ்தாஸ் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பீலா வெங்கடேசன் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், கடந்த 24ம்தேதி கேளம்பாக்கம் போலீசார், வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்தாசை கைது செய்தனர். இந்த வழக்கில் திருப்போரூர் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து, நீதிபதி அனுப்பிரியா அவருக்கு 2 நபர் ஜாமீன் வழங்குவதாகவும், திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

இதையடுத்து, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று ராஜேஷ்தாஸ் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், 2 நபர்களின் மனுக்களை தாக்கல் செய்து ஜாமீன் பெற்றார்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி