திருப்போரூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ மனைவி மறைவு: அமைச்சர் அஞ்சலி

திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏவின் மனைவி மறைவுக்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் அஞ்சலி செலுத்தினார். கடந்த 1977, 1980, 1996 ஆகிய காலகட்டங்களில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ஜி.சொக்கலிங்கம். கடந்த 1999ம் ஆண்டு அவர் காலமானார். அவரது, மகன் அன்புச்செழியன், தற்போது திமுக காஞ்சி வடக்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். அன்புச்செழியனின் மனைவி காயத்ரி, செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி துணை தலைவராக உள்ளார். இந்நிலையில், கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூரில் வசித்து வந்த முன்னாள் எம்எல்ஏ சொக்கலிங்கத்தின் மனைவி சந்திரா (80). நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடலுக்கு காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், எம்பி செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், துணை தலைவர் சத்யா சேகர், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்….

Related posts

செங்கோட்டை அருகே அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் போராடி காட்டுக்குள் விரட்டினர்

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது!

பந்தலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை: வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை