திருப்பூர் காங்கயம் அரசு கல்லூரியில் புதிய வலைத்தளம்

 

காங்கயம், மார்ச் 8: காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய வலைத்தளம் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி கருத்தரங்க அறையில் கல்லூரிக்கான புதிய அதிகாரப்பூர்வ வலைத்தளம் முதல்வர் நசீம்ஜான் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கல்லூரியின் செயல்பாடுகளை மாணவர்களும் பெற்றோர்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கில் புதிய வடிவில் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. இவ்விழாவில், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் வலைத்தள ஒருங்கிணைப்பாளர் தேவகி செய்திருந்தார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை