திருப்புவனம் பூமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

 

திருப்புவனம், மார்ச் 6: திருப்புவனம் பூமாரியம்மன் ரேணுகா தேவி அம்மன் கோயிலில் பத்து நாள் நடைபெறும் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்புவனம் புதூரில் பூமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எங்கிருந்தாலும் 10ம் நாள் பங்குனி திருவிழாவில் பங்கேற்பது வழக்கம்.

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காப்புக்கட்டி விரதமிருக்கும் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி அம்மனை வலம் வருவது, தினசரி அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம், ஆயிரம் கண்பானை, மாவிளக்கு, பொம்மை உள்ளிட்ட நேர்த்தி கடனை பக்தர்கள் நிறைவேற்றுவது வழக்கம், இந்தாண்டு பங்குனி திருவிழா நேற்று இரவு பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கொடி மரத்திற்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்த பின் இரவு பத்து மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விரதமிருக்கும் பக்தர்கள் அம்மனுக்கு முன் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். பாபு பட்டர் உட்பட சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர்.

மார்ச் 12ம் தேதி பத்தாம் நாள் திருவிழாவில் அக்னி சட்டி ஊர்வலம்,பொங்கல்,மாவிளக்கு அதிகாலை நேர்த்தி கடன் கிடாவெட்டும் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை தரிசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மறு நாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கவுள்ளது. சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் கிராம விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை