திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நவராத்திரி விழா அக்.3ம் தேதி துவக்கம்

திருப்பரங்குன்றம், செப். 19: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அக்டோபர் மாதம் 3ம் தேதி நவராத்திரி விழா துவங்குகிறது. மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அக்டோபர் 3ம் தேதி துவங்குகிறது. அன்று முதல் 12ம் தேதி வரை 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறும். இவ்விழாவின் போது தினமும் சிறப்பு அலங்காரத்தில், கோவர்த்தனாம்பிகை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதில் முக்கிய விழாக்களான பாட்டாபிஷேகம் அக்.5ம் தேதியும், திருக்கல்யாணம் 6ம் தேதியும் நடைபெறும்.நவராத்திரி விழா நிறைவடைந்த அடுத்த நாளில் பசுமலையில் உள்ள அம்பு போடும் மண்டபத்திற்கு சுப்பிரமணியசுவாமி எழுந்தருள்வார். அங்கு வில் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறும். இதனையொட்டி அக்.12ம் தேதி மாலை திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க தங்கக்குதிரை வாகனத்தில் வெள்ளியிலான வில் அம்பு ஏந்தியபடி சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு, பசுமலையில் உள்ள அம்பு விடும் மண்டபம் வந்தடைவார். பின்னர் எட்டு திசைகளிலும் அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்