திருப்பதி வரலாற்றில் சாதனை மே மாதத்தில் மட்டுமே ரூ.130 கோடி காணிக்கை

திருப்பதி: தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக ஏழுமலையான் கோயிலில் மே மாதத்தில் மட்டும் ₹130.29 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் 22.62  லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ₹130.29 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். பக்தர்களுக்கு 1.86 கோடி லட்டுகளை தேவஸ்தானம் விற்பனை செய்துள்ளது. 47.03 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் அருந்தினர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 10.72 லட்சம் பேர் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். தேவஸ்தானம் வரலாற்றில் முதல்முறையாக ஒரே மாதத்தில் ₹130 கோடி காணிக்கையாக கிடைத்திருப்பது முதல் முறையாகும் என்று திருப்பதி தேவஸ்தானம் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது….

Related posts

திருப்பதி லட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

துபாயில் கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் நடிகர் நிவின் பாலியிடம் போலீசார் விசாரணை

டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் அச்சிட்டு தருவதை நிறுத்த முடிவு: டிஜிட்டல் வடிவில் வழங்க கேரளா அரசு திட்டம்