திருப்பதியில் நாளை தங்க கருட சேவை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பவுர்ணமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  நாளை இரவு தங்க கருடசேவை நடைபெற உள்ளது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை தங்க மற்றும் வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்’ என அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்….

Related posts

அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை : பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு