திருநங்கைகள் குறைதீர் கூட்டம்

தேனி, ஆக. 4: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். இதில் மகளிர் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனாவிடம் திருநங்கைகள் வீட்டு மனை கேட்டும், கல்விக்கடன், ஆதார் அட்டை, சுயதொழில் தொடங்க கடன், திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். இக்கூட்டத்தின்போது, சுயதொழில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் அரண்மனைப்புதூரில் பாஸ்ட்புட் கடை நடத்தி வரும் சின்னமனூரை சேர்ந்த திருநம்பி அருண் என்பவருக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்