திருத்தணி ரயில் நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு

 

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்படுத்தும் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருத்தணி ரயில் நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்று வருகின்றது. திருத்தணி முருகன் கோயில் கோபுரம் வடிவில் ரயில் நிலையம் முகப்பு பகுதியில் கோபுரம் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த பயணிகளுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய காத்திருப்பு அறைகள், பெரிய அளவில் ரயில் பயணிகள் காத்திருப்பு ஹால், முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறைகள், 12 மீட்டர் நடைமேடை பாலம், எஸ்கிலேட்டர் உள்பட பல்வேறு அதிநவீன வசதிகளுடன் ரயில் நிலையம் மேம்ப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை ஆய்வு செய்ய சிறப்பு ரயிலில் திருத்தணி ரயில் நிலையம் வருகை தந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருத்தணி ரயில் நிலையம் மேம்படுத்தும் பணிகள் 80 சதவீத முடிந்துள்ள நிலையில், இரண்டு மாதங்களில் பணியை முழுமை செய்து அதிநவீன வசதிகளுடன் கூடிய சேவைகள் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சிங் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, சென்னை கோட்ட பொது மேலாளர் விஸ்வநாதன், திருத்தணி ரயில் நிலைய மேலாளர் சீனிவாசுலு உட்பட ரயில்வே உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை