திருத்தணி, பொதட்டூர்பேட்டையில் கஞ்சா ஏஜெண்ட் உள்பட 6 பேர் பிடிப்பட்டனர்

பள்ளிப்பட்டு: திருத்தணி, பொதட்டூர்பேட்டையில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். பொதட்டூர்பேட்டை எல்லைக்கு உட்பட்ட பாண்டரவேடு பகுதியில் உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொதட்டூர்பேட்டை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 10 கிராம் எடையில் சுமார் 2 கிலோ பாக்கெட்டுகள் கஞ்சா விற்பனைக்கு கடத்தியது தெரியவந்தது.இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் சித்தூர் மாவட்டம் நகரி மண்டல் கரகம்பாடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(32), ஆந்திராவில் மொத்தமாக கஞ்சா வாங்கி 10 கிராம் பாக்கெட்டுகளில் அடைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து ரூ.300க்கு விற்பனை செய்வது தெரியவந்தது.  அவர் கொடுத்த தகவலின்பேரில் கஞ்சா விற்பனை செய்த பொதட்டூர்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த வேலு(18), சவட்டூரை சேர்ந்த சரண்(19), வாணிவிலாசபுரம் பகுதியை சேர்ந்த நவீன்குமார்(21), பொதட்டூர்பேட்டையை சேர்ந்த பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். திருத்தணி: திருத்தணி சுற்றுலா மாளிகை அருகே திருத்தணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த ஆசாமியை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவரிடம் கஞ்சா இருந்தது. விசாரணையில், முருகப்பா நகரை சேர்ந்த குட்லூ (எ) சரவணன்(30) என தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 கிலோ 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்….

Related posts

வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் கொள்ளை

கடன் வாங்க உடன் அழைத்து சென்றபோது நண்பனின் ரூ.10 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபர்: போலீசில் புகார்

மது போதை தகராறில் தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொலை: திருநங்கை உட்பட 3 பேரிடம் விசாரணை