திருத்தணி ஒன்றியத்தில் பிரதமர் திட்டத்தின் சாலைகள் ; மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

திருத்தணி: பாரத பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், திருத்தணி ஒன்றியத்தில் அடங்கிய எல்லம்பள்ளி முதல் கொத்தூர் மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோதண்டராமபுரம்-முத்துக்கொண்டாபுரம், கேஜி.கண்டிகை வளர்புரம், பூண்டி ஒன்றியத்தில் உள்ள பிஆர்ஆர்.ரோடு முதல் அரும்பாக்கம் வரை டி.எஸ்.சாலை முதல் புன்னம்பாக்கம் வரை, டி.எஸ்.ரோடு முதல் மெய்யூர் வரை என 8 சாலைகள் சுமார் 24 கி.மீ. வரை அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், மேற்கண்ட சாலைகள் அனைத்தும் தரமானதாக உள்ளதா என்று டில்லியில் இருந்து தேசியதரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் சர்மா, சத்யபிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள், ‘’சாலைகள் தரமானதாக உள்ளது’ என்று திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் ராஜவேலு, உதவி இயக்குனர் சங்கரன் உள்ளிட்ட அதிகாரிகளை பாராட்டினர். அப்போது ஒன்றிய பொறியாளர்கள், தரக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்….

Related posts

திருத்தணியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!