திருத்தணியில் மர ஜன்னல், கதவு தயாரிக்கும் கடையில் பயங்கர தீ விபத்து

திருத்தணி: திருத்தணியில் மரக்கதவு தயாரிக்கும் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருத்தணி ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்(50). சித்தூர் சாலையில் ஜன்னல், கதவு தயாரிக்கும் கடை மற்றும் மரத்திலான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் இரண்டு கடைகள் நடத்துகிறார். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறிய நிலையில், தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் மக்கள் வெளியே வந்து பார்த்தனர்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடையின் உரிமையாளர் மகேந்திரன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களால் தீயை அணைக்க முடியாததால் திருத்தணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையில், வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் என்று தெரிகிறது. புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.* கரும்பு தோட்டம் எரிந்து நாசம்பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லை பகுதியில் கொல்லாகுண்டா புதுக்காலனியை சேர்ந்த விவசாயிகள் குமார் மற்றும் நகாராஜ். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், விவசாய நிலத்திற்கு மேலே செல்லும் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில், ஏற்பட்ட தீ பொறியால் கரும்பு தோட்டம் தீப்பற்றி எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் தோட்டம் முழுவதும் தீ மளமளவேன பரவியது. இதுகுறித்து தோட்ட உரிமையாளர்கள் பள்ளிப்பட்டு மற்றும் கார்வேட் நகரம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில், 7 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே