திருத்தங்கல் மண்டலத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ஆய்வு

சிவகாசி, மே 5: சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் மண்டலத்தில் 1வது வார்டில் சுக்ரார்பட்டி ரோட்டில் அமைந்து இருக்கும் மயானத்தில் நடைபெறும் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளையும் சுக்கிரார்பட்டி ரோடு தனியார் பள்ளியின் பின்புறம் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளையும், 2 வது வார்டில் திருத்தங்கல் பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் தாளோடை மங்கம்மா சாலை கிணற்றிற்கு செல்வதற்கு புதிய பாலம் அமைப்பதற்கு முதற்கட்ட ஆய்வு பணிகளையும் 17வது வார்டில் திருத்தங்கல் பெரியார் சிலை பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் குப்பைகளை அகற்றும் பணிகளையும் மற்றும் சமுதாய கூட பராமரிப்பு பணிகளையும் மேயர் சங்கீதா இன்பம் நேரடியாக பார்வையிட்டார்.

ஆய்வின் போது துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், ஆணையாளர் சங்கரன், பொறியாளர் ரமேஷ், திமுக கவுனசிலர்கள் அ.செல்வம், சசிக்குமார், நிலானி மணிமாறன், திமுக மாநகர பொருளாளர் சீனிவாசபெருமாள் உடனிருந்தனர்.திருத்தங்கல் மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் சங்கீதா இன்பத்திடம் திமுக கவுன்சிலர் சசிகுமார், தனது வார்டில் செல்லியாரம்மன்கோயில் ஊருணியில் பூங்கா அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் சிறுவர் பூங்கா அமைக்க தாமதம் ஆவதால் குப்பைகள் நிறைந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் என்றும் வலியுறுத்தினார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து