திருச்செந்தூர் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருச்செந்தூர்,டிச.1: திருச்செந்தூர் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 81 மாணவர்களுக்கும், செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 209 மாணவிகளுக்கும் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வங்கினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்டிஓ குருசந்திரன், தாசில்தார் வாமனன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஷிபா ஜெனி அமுதா, கங்காகவுரி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், ஆணையர் கண்மணி, மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் ஆனந்தராமச்சந்திரன், அந்தோணிட்ரூமன், சுதாகர், செந்தில்குமார், தினேஷ் கிருஷ்ணா, மகேந்திரன், முத்துக்குமார், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, ரேவதி, முத்துஜெயந்தி, லீலா, மஞ்சுளா, பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மை குழு துணை தலைவர் கவிதா, உறுப்பினர்கள் வீரராஜலெட்சுமி, அம்மணி, சாந்தி, கல்யாண மனோகரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ரீட்டா நன்றி கூறினார்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி